வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி .
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா. இதன்படி கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்ததையடுத்து நாடு திரும்ப முடியாமல் பரிதவித்த இலங்கையர்கள் மீண்டும் அடுத்த வாரம் முதல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். கடுவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடு கடந்த மாதம் 14ம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.