Random Password Generator
புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.
எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால் முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார். ஒரு வருடத்தின பின்னர், அந்த சாரதிகள் மருத்துவ பரிசோதனை முடித்ததும் அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.
Comments
Post a Comment