கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் இதுவரை 338 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எணிணிக்கையானது 649 ஆக காணப்படுவதுடன், குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியவர்களின் தொகையும் 139 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரம் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்ப்டடுள்ளனர். தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மொத்தமாக 503 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் 141 பேரும், கடற்படை வைத்தியாலையில் 126 பேரும், கொழும்பு, கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையில் 75 பேரும், வெலிகந்தை வைத்தியசாலையில் 66 பேரும், காத்தான்குடி வைத்தியசாலையில் 55 பேரும், இரணவில வைத்தியசாலையில் 22 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 18 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அது மாத்திரமன்றி கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 187 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment