பெரும்போகத்தில் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
விவசாய காப்புறுதி இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு மாத்திரம் 5,000 ரூபாவை வழங்குவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கும் கமநல சேவை ஆணையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment