இலங்கையில் தங்கியிருந்த 50 பாகிஸ்தானியர்களை இலங்கை விமானம் மூலம் இன்று (28) காலை கொழும்பிலிருந்து அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கான கொழும்பு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் , பாகிஸ்தான் அரசு மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டிருந்தது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட இவர்களை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சார்பில் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அகமது வழி அனுப்பி வைத்தார்.
தம்மை பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்து தந்த பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துக்கு அவர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
மேலும் , கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதையடுத்து சிரமங்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் பிரஜைகளின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினார்.
Comments
Post a Comment