இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (27) நள்ளிரவு மேலும் 18 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்றைய நாளில் மாத்திரம் 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இது ஒரு நாளில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும்.
கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரையான 6 நாட்களில் 252 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் கூடுதலான நோயாளர்கள் வெலிசர கடற்படை முகாமிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முதன் முதலாக சீனப் பெண்ணொருவர் கொரோனா வைரசுடன் அடையாளம் காணப்பட்டார்.
அன்றிலிருந்து 100 நோயாளர்கள் இனம் காணப்பட வெறுமனே 57 நாட்களே சென்றன.
இரண்டாவது 100 நோயாளர்கள் பதிவாக 20 நாட்களே சென்றன.
மூன்றாவது 100 நோயாளர்களும் 08 நாட்களுக்குள் அடையாளம் காணப்பட்டனர்.
நான்காவது 100 நோயாளர்களும் நாங்கு நாட்களுக்குள் அடையாளம் காணப்பட்டதுடன், இறுதியாக அடையாளம் காணப்பட்ட 100 நோயாளர்கள் பதிவாக இரண்டு நாட்களே சென்றன.
இதுவரை 396 பேர் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இதுவரை 120 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை குளியாபிட்டிய அம்மலவ பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment