கொரோனா ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் ஐ.நா. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
UNFPA எனப்படும் ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (UN Population Fund) சார்பில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டுள் கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு வரக்கூடும். கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், 4.7 கோடி பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகக்கூடும்.
ஆண்களும், பெண்களும் பல நாட்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. 6 மாதங்கள் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீடிக்குமானால் 3.10 கோடி குடும்பச் சண்டைகள் நிகழக்கூடும். இப்படியே அடுத்தடுத்த 3 மாதங்களில் தலா 1.50 கோடி குடும்பச் சண்டைகள் அதிகமாகும்.
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 1.3 கோடி குழந்தைத் திருமணங்கள் நடைபெறலாம்.
“எந்தச் சூழலிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம்” என ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் இயக்குநர் நடாலியா கூறுகிறார்.
Comments
Post a Comment