க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசீவன் தீவு மாணவன் வரலாற்று சாதனை.
நாசீவன் தீவு கிராமமானது 4 பக்கமும் கடல் மற்றும் ஆறுகளால் சூழுப்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனான தவராஜா சனுஸ்காந் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் 5 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
மீனவத் தொழில் புரியும் தந்தை தனது மகனின் கல்விக்காக தமது கிராமத்தில் இருந்து அன்றாடம் தோணியின் உதவியுடன் வாழைச்சேனை பிரதேசத்திற்கு ஆற்றைக் கடந்து வந்து மகனின் கல்வியை தொடர பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளர்.
குறித் மாணவனின் சாதனையை பிரதேச இளைஞர் அமைப்புக்கள் மற்றும் மட்டக்களப்பு வாசம் உதவும் கரங்கள் அமைப்பு என்பன பாராட்டி கௌரவித்தனர். இதேவேளை வாசம் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனினால் குறித்த மாணவனின் எதிர்கால கல்வி வளர்சி கருதி துவிச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.
Comments
Post a Comment