கந்தளாய் நகரில் வியாபார நிலையங்களை உடனடியாக மூடுமாறு வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்தது.
திருகோணமலை, கந்தளாய் நகரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியிலுள்ள வியாபார நிலையங்களை உடனடியாக மூடுமாறு வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்தது.
இந்த அறிவித்தலின் அடிப்படையில் வியாபார நிலையங்கள் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment