வடகொரிய ஜனாதிபதி உயிருடன் நலமாகயிருக்கின்றார்- தென்கொரியா


வடகொரிய ஜனாதிபதி உயிருடன் இருக்கின்றார் நலமாகயிருக்கின்றார் என தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதியின் சிரேஸ்ட வெளிவிவகார கொள்கை ஆலோசகர் மூன் சங் இன் இதனை சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

அவர் உயிருடன் உள்ளார் நலமாக உள்ளார், அவர் ஏப்பிரல் 13 ம் திகதி முதல் வொன்சன் பகுதியில் காணப்படுகின்றார்,சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளை காணமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரிய இணைப்பு அமைச்சர் கிம் யினே சுல் வழமைக்கு மாறாக எதுவும் இடம்பெறவில்லை என்பதையே புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.