கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்டத்தின் தலாத்துஓயா நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
தலாத்துஓயா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் வெதகே தலைமையில் கூடிய வர்த்தகர்கள் சுகாதாரத்துறையினரது ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கு அமைய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பொலிஸாரின் எந்தவித தலையீட்டின் பேரில் தாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை என்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.
கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நபர்கள் தலாத்துஓயா நகருக்கும் வந்திருக்கலாம் என்கின்ற சந்தேகத்தில் இன்றைய தினம் நகரை முழுமையாக மூடிவைப்பதற்கும் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய இன்று தலாத்துஓயா நகரம் வெறிச்சோடியிருந்தமை காணமுடிந்தது.
Comments
Post a Comment