முதல் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பா?


பிரிட்டனில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட உயிரிழந்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது.

பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசி பரிசோதனை கடந்த வாரம் வியாழக் கிழமை இருவருக்கு செலுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த இரண்டு பேரும் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு கண்காணிக்கப்பட்டு, பின்னர் மற்ற தன்னார்வலர்களுக்கும் இந்த ஊசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்பு ஊசி வெற்றி பெற்றால், வரும் செப்டம்பர் மாதம் பத்து லட்சம் ஊசிகள் பிரிட்டனில் முதற்கட்டமாக மக்களுக்கு செலுத்தப்படும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தெரிவித்து இருந்தது.

முதல் ஊசியை அறிவியல் விஞ்ஞானி எலிசா கிரான்டோ போட்டுக் கொண்டார். மருத்துவ உலகின் சவாலுக்கு, சாதனைக்கு தான் துணை இருக்கப் போவதாகவும், இந்த தடுப்பு ஊசி நல்ல பலனை கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பலன் இல்லை

இந்த நிலையில் அவர் ஊசி போட்டுக் கொண்ட இரண்டு நாட்களில் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். ஆனால், அவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Coronavirus Vaccine: பிரிட்டனில் நாளை மனிதருக்கு செலுத்தி சோதனை!!

இதை எலிசாவே தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். ஆனால், அவரது ட்விட்டர் பதிவை பாதுகாப்பானதாக அறிவித்துள்ளார். அவரால் அனுமதிக்கப்பட்ட சிலரால் மட்டுமே அவரது ட்விட்டர் பதிவை பார்க்க முடியும். அவரது ட்விட்டர் பதிவை அவரது நண்பர் உறுதிபடுத்தியுள்ளார். எலிசா நலமாக இருக்கிறார் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் கொரோனாவுக்கு தடுப்பு ஊசி; பிறந்தது நம்பிக்கை!!
எலிசா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை பிரிட்டனும் மறுத்துள்ளது. அந்த நாட்டில் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை இதுகுறித்து ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.