திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபட்டுன பிரதேசத்திலுள்ள விகாரைக்குள் மறைந்திருந்த பெண்கள் மூவரும் பிக்கு ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க வர்த்தக வலயத்துள்ள ஆடைத்தொழில்சாலையில் கடமையாற்றிய பெண்கள் மூவரே இவ்வாறு விகாரைக்குள் மறைந்து இருந்துள்ளனர்.
மேற்படி பெண்கள் மூவரையும் தன்னுடைய வாகனத்திலேயே அழைத்து வந்த அந்த தேரர், அங்கு தங்கவைத்துள்ளார்.
கைதான பெண்கள், வாரியபொல, அம்பலாங்கொட மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார், சோதனை மேற்கொண்டபோது, விகாரையின் மறைவான இடத்தில், சட்டவிரோதமான மதுபானம் தயாரிப்பதற்கான பொருட்கள், அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அதற்குப் பின்னரே, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment