குறைந்தது இன்னும் ஒருவருடத்திற்கு கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிக்கை ஒன்றை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ரணில், அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை மக்களுக்கு அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Pray for Sri Lanka
ReplyDelete