ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட கொடூர சம்பவம்.




கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) கிழக்கு லண்டனில் உள்ள ஐல்போர்டில், பதிவான ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வம்சாவளியை சேர்ந்த குறித்த குடும்பம் கிழக்கு லண்டனின் ஐல்போர்டில், வாழ்ந்துவந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு வயது மகள் மற்றும் மூன்று வயது மகன் கத்தியால் குத்திகொலைசெய்யப்பட்டதுடன் தந்தையும் கத்திகுத்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொலை, தற்கொலை முயற்சி என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அந்நாட்டு புலனாய்வு பிரிவினர் நேற்று புதன்கிழமை கொலை தொடர்பில் 40 வயதான குழந்தைகளின் தந்தையை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளின் தாய் தமது குழந்தைகள் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த தருணத்தை வாக்கு மூலம் அளித்துள்ளார்.

தாம் குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு படுக்கையறைக்கு விரைந்த போது, சந்தேக நபரான குழந்தைகளின் தந்தை இரத்தில் நனைந்த ஒரு பெரிய சமையலறை கத்தியுடன் குழந்தைகளின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

அப்பாவி குழந்தைகளின் கொடூர கொலைக்கான காரணத்தை கண்டறிய புலனாய்வு பிரிவினர் தமது தீவிரவிசாரணையை தொடர்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.