O/L பரீட்சைப் பெறுபேறுகள் இன்னும் இரு தினங்களில் வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர்.
www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் பரீட்சார்த்திகள் பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம் எனவும்இ தற்காலிக சான்றிதழையும் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
“கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் தபாலில் அனுப்பப்பட மாட்டாது. ஆனால், அதிபர்களுக்கு பெறுபேறுகளை அனுப்புவதற்கு வேறொரு வழிமுறை கையாளப்படும்.
வலயக் கல்விப் பணிப்பாளர்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும் பெறுபேறுகளை இணையத்தில் அணுகுவதற்காக பிரத்தியேக கடவுச்சொற்களும் பயனர் பெயர்களும் வழங்கப்படும்” எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment