ஐபோன் 12 விலை லீக் ஆனது உண்மையா? என்ன விலை ? எப்போது அறிமுகம்?
வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 12 தொடர் பற்றிய போதுமான அள்வு லீக் மற்றும் "கிட்டத்தட்ட அதிகாரபூர்வமான" தகவல்களை நாம் பார்த்துவிட்டோம் - கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட வடிவமைப்பு மற்றும் சில விவரக்குறிப்புகள் உட்பட.
சரி, இப்போது வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 12 தொடரின் விலை நிர்ணயம் பற்றிய முதல் தடயங்களும் எங்களிடம் உள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி. ஆப்பிள் ஐபோன் 12 தொடரின் கீழ் ஒரு பிரீமியம் ஐபோன் ஒன்று அறிமுகம் ஆகலாம். அது 6.1 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 12 ப்ரோ ஆகும். அதன் விலை 999 அமெரிக்க டாலர்களாக இருக்கலாம், அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.75,800 ஆகும்.
இதேபோல ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.7 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 1,099 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகம் ஆகலாம், அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.83,400 ஆகும்.
ஆனால் நிச்சயமாக இந்த இரண்டு ஐபோன்களிலும் இதை விட அதிக விலைக்கே இந்தியாவில் அறிமுகமாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
மறுகையில் (வதந்திக்கப்படும்) உள்ள இரண்டு பட்ஜெட் ஐபோன்களுமே, அதாவது ஐபோன் 11 இன் வாரிசுகள் ஆனதும் 6.1 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே கொண்ட மாடலாகவும் மற்றும்5.4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் முறையே 749 அமெரிக்க டாலர்கள் மற்றும் 649 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகம் ஆகலாம்.
இந்த இரண்டு மாடல்களும் 5ஜி ஆதரவைப் பெறுகின்றன, மேலும் ஓஎல்இடி டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதில் டூயல் கேமரா அமைப்புகளும் பட்டியலில் உள்ளன.
நிச்சயமாக, ஐபோன் 12 தொடர் அறிமுகம் செய்வதற்கு முன் அதன் விலை மாறக்கூடும், ஆனால் அது வரையிலாக நமக்கு இந்த விலை நிர்ணயங்களை ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் நியாமான மற்றும ஒழுக்கமான விலையாக நாம் கருதலாம்.
இந்த ஆண்டு 5ஜி ஆதரவைப் பெற்ற சில ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்களின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டோம், ஆனால் ஆப்பிள் அந்த அம்சத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப் போவதில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையில், கோவிட்-19 வெடிப்பு காரணாமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 தொடர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதாவது அக்டோபர்-நவம்பர் மாத வாக்கில் இவைகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
Comments
Post a Comment