பொலிஸாரின் விடுறை இரத்துக் காலமானது மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரத்துச்செய்யப்பட்டுள்ள விடுமுறைக் காலமானது நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி பொலிஸாரின் விடுறை இரத்துக் காலமானது மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்துக் காலமானது மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் குறித்த விடுமுறை இரத்துக் காலமானது ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, 30 ஆம் திகதி வரை நீடித்து ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே தற்போது மீண்டும் மே மாதம் 15 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸாரின் விடுறைக் காலமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.