சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் படி கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் கல்முனை வலயம் முதலிடத்தைப்பெற்றுச் சாதனை.


அண்மையில் வெளியாகியுள்ள சாதாரண சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் படி கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் கல்முனை வலயம் முதலிடத்தைப்பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

எமது வலயத்திலுள்ள ௬௫ பாடசாலைகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றின. அவர்களுள் 79.33வீதமான பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் 14 ஆம் இடத்திலிருந்த நாம் இம்முறை12ஆம் இடத்தை அடைந்து இரு இடங்கள் முன்னேறியுள்ளோம்.

77.69வீதத்தினைப்பெற்ற அக்கரைப்பற்றுவலயம், இரண்டாமிடத்தினையும் 75.57வீதத்தினைப்பெற்ற தெஹியத்தக்கண்டிய வலயம் 3ஆம், இடத்தினையும் பெற்றுள்ளது.

இச்சாதனைக்காக உழைத்த முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.

சம்மாந்துறை கல்வி வலயம் அகில இலங்கை மட்டத்தில் 83ஆம் இடத்தினையும் கிழக்கு மாகாணத்தில் 12ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.

மேலும் கடந்த வருடத்தை விட தேசிய ரீதியில் 10 இடங்கள் முன்னேறி காணப்படுகிறது. மாகாண ரீதியில் கடந்த வருடத்தை விட 3 இடங்கள் முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.