23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் றொசாந்தன் என்கிற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடியபோது அவர் இன்று (03-05-2020) காலை அவருடைய கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய அம்மம்மா அம்மப்பா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது இன்று காலை அவர்கள் கிணற்றுக்கு நீர் எடுப்பதற்காக சென்றபோது கிணற்றினுள் உடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் றொசாந்தன் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.