பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாய்க்கும் 425 கிராம் எடைகொண்ட ரின்மீனின் விலை 100 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது.


மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தா திசானநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாய்க்கும் 425 கிராம் எடைகொண்ட ரின்மீனின் விலை 100 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, சீனிக்கான கட்டுப்பாட்டு விலையையும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கடந்த வாரம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.