700 ஐ கடந்தது கொரோனா இலங்கையில்.


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 705 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் இரவு 9 மணிக்குப் பின்னர் குறித்த 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 15 கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் கடற்படையினர் எனவும் ஏனைய 3 பேர் கடற்படையினருடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 526 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 179 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 172 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.