கம்பளையின் கெசல்வத்தை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டதனையடுத்து குறித்த கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்பளை நகரில் உள்ள அத்தியாவசிய தேவைகள், தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை (04) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் நகருக்குவரும் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி கம்பளை நகர சபையின் பொது சுகாதார பிரிவினருடன் பொலிஸாரும் இணைந்து கம்பளை வைத்தியசாலை பஸ் மற்றும் ரயில் நிலையம் உட்பட மக்கள் கூடும் பொது இடங்களைச் தொற்று நீக்கம் செய்து வருகின்றனர்.
கலகம் அடக்க பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் கழுவி சுத்தப்படுத்தி தொற்று நீக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment