கந்தளாய் நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு கொரொனா தொற்றாளர்சென்ற வைத்திய நிலையம்,கடைகள் மூன்று போன்றவற்றுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - கந்தளாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர் மெலிண்டன் கொஸ்தா இன்று தெரிவித்துள்ளார்.
கந்தளாய் ரஜஎல பகுதியைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கடற்படை வீரர் விடுமுறையில் கந்தளாயிக்கு சென்ற நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கந்தளாய் தள வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பிய நிலையிலே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கந்தளாய் நகரம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு கொரொனா தொற்றாளர்சென்ற வைத்திய நிலையம்,கடைகள் மூன்று போன்றவற்றுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment