குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.


நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் காரணமாக தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால், குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் வீழ்ச்சியேற்பட்டு வருகிறது. எனவே வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் போராடும் சகோதர இலங்கையர்களின் உயிர்களைக் காப்பதற்கு இரத்ததானம் அளிக்க விரும்பும் அனைவருக்குமான அறிவித்தலே இதுவாகும்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, ஒரேநேரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் இரத்ததானம் செய்வதற்கு ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

எனவே இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 011 5332153 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது nbts.life என்ற இணையப்பக்கத்தின் மூலம் இரத்ததானம் அளிப்பதற்காக முன்பதிவு செய்து, நேரமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.