ஜா-எலா பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம்.
மார்ச் 17ம் தேதி அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்து ஏப்ரல் 17ம் தேதி அன்று வீடு திரும்பினார்.
இதன் பின்னர் திடீரென இன்று மார்பு வலி காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளி பி.சி.ஆருக்கு மீண்டும் பரிசோதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கோடாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment