எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் மஹிந்தவின் கூட்டம்.


எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராமன்ற உறுப்பினர்கைள இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இன்று காலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 225 முன்னாள் பாராளுமன்ற உப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிரணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முக்கணி ஆகிய கட்சிகள் பிரதமர் தலைமையிாலன இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் அதனை நிராகரிக்கும் அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் ஆகிய சர்ச்கைகளுக்கு மத்தியிலேயே இன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் ரணில் விக்கிரமசிங் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்துள்ளன.

எனினும் இன்றைய கூட்டத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய பங்காளி கட்சிகளும் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.