கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் என்ற மருந்து கட்டுப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கிலியட் அறிவித்துள்ளது.


உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை ரெம்டெசிவிர் என்ற மருந்து கட்டுப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கிலியட் அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 3,392,718 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,178 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் உலகநாடுகள் தீவிரம் காட்டியுள்ளன.

இந்நிலையிலேயே, ரெம்டெசிவிர் என்ற மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக அமெரிக்க நிறுவனமான கிலியட் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் தொடர்ந்தும் கூறியுள்ளதாவது,

“கொரோனா நோயாளிகளுக்கு வைரசுக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது. முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (NIAID) மதிப்பீடு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஏனைய மருந்துகளை விட கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து 31 வீதம் கூடுதல் பலனை அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும்போது சராசரியாக 15 நாட்களில் நோயாளிகள் குணமடைகின்றனர். ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் 11 நாட்களில் நோயாளி குணமடைந்துள்ளார் என்றும் NIAID கூறியுள்ளது.

இது குறித்து NIAID தலைவர் அந்தோனி பாயுசி கூறுகையில்,

“நோயாளிகளை மீட்பதற்கான நேரத்தைக் குறைப்பதில் ரெம்டெசிவிர் ஒரு தெளிவான, குறிப்பிடத்தக்க, நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

31 சதவிகித முன்னேற்றம் என்பது, 100 சதவிகிதம் நாக் அவுட் போல் தெரியவில்லை என்றாலும், தற்போதைய முன்னேற்றம் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த மருந்தால் வைரசை தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது." என்றார்.

இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கும் சோதனை முயற்சி பிப்ரவரி 21ம் திகதி தொடங்கியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1,063 பேருக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறிது.

கொரோனாவை குணப்படுத்துவதற்கு இந்த மருந்தை உட்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.