பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை.


பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

எனினும் இதனை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் தீர்மானிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா வைரஸ் பரவலை மையமாகக்கொண்டு இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாக்குகளை எண்ணும் பணிகள் ஒருநாளில் இடம்பெறலாம் என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்

தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று அடிப்படையிலேயே இந்த யோசனை ஆராயப்பட்டு வருகிறது.

எனினும் பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவற்கான எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

ஒரு நாளில் சில மாவட்டங்களுக்கும் இன்னும் ஒரு நாளில் ஏனைய மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படலாம். இதற்கு எத்தனை நாட்களை ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.

இதற்கிடையில் நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொறுத்தவரையில் தேர்தல் திகதியை மாற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் மஹிந்த தேசப்பிரிய இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.