தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று மரணமடைந்துள்ளார்.
குறித்த சிப்பாய் கடந்த மாதம் 22ம் திகதி முகாமிலிருந்து வீடு திரும்பி தனிமைப்படுதலில் இருந்துள்ளார்.
அதன்பின்னர் கடந்த 27ம் திகதி அவர் முகாமுக்கு திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடன் வீட்டில் தங்கியிருந்த சிப்பாயின் பாட்டி இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரது மரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
Comments
Post a Comment