ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று.


ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்றிரவு (30) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் ஏலவே மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட ஒலுவில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் இயங்குவதாக தெரிவித்தார்.

கடற்படையினரால் பராமரிக்கப்படும் மேற்படி முகாமில் வத்தளை ஜா -எல சுதுவெல பகுதியைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த நால்வரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் உடனடியாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

முட்டையின் விலை 2 ரூபாவால் குறைப்பு.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.