19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு.

நாட்டில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தினூடாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் தரவுகளூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த மோசமான நிலைமை அண்மைக் காலங்களாக படிப்படியாக அதிகரிப்பதாக தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் கணக்கெடுப்பின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3,600 HIV தொற்றுக்குள்ளானோர் இருத்தல் வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை 2,000 பேர் வரையிலேயே கிளினிக்கிற்காக பதிவு செய்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 1,600 பேரும் தமக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்து அறியாமல், சமூகத்தில் ஏனையவர்களை தொடர்பு கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், ஆரோக்கியமானவர்களும் இத்தகையோரால் பாதிக்கப்படக்கூடும் எனவும் தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், கிளினிக்கிற்காக வருகை தரும் HIV நோயாளர்களை பாதுகாக்குமாறும் குருதி பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறும் விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி வைத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.