20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில்.
அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போதே குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய நீ அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக அமைச்சர்கள் சிலர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment