இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.
அவர்களில் இந்தியாவில் உள்ளவர்களுக்கே அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 79 ஆயிரத்து 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் சர்வதேச ரீதியில் 4 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 960 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 637 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 76 லட்சத்து 98 ஆயிரத்து 622 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment