2 மோட்டார் சைக்கிள்கள் மீது மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்.
முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பாரிய மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முல்லைத்தீவு அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 23 மற்றும் 33 வயது நபர்களே இறந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment