நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்தது .
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச்செயல் மற்றும் போதைபொருள் கடத்தல் தொடர்பான குற்றச் செயல்களை முழுமையாக இல்லாதொழிப்பது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலுக்கான பணப் பரிமாற்றம் பெரும்பாலானவை தொலைபேசிகள் மூலமாகவே இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளர்.
இந்த விடயம் சம்பந்தமாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment