போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக தினமும் 80 முதல் 100 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர்.
உயிரிழக்கின்றனர் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“போதைப்பொருள் மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்து 1000 மருத்துவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு திட்டத்தை தனது சங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் இந்த திட்டத்தை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்த சுகாதார அமைச்சகம், தேசிய புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆணையம், தேசிய ஆபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கல்வி அமைச்று மற்றும் பிற பொறுப்புள்ள அமைப்புகளை ஒன்றிணைக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Comments
Post a Comment