அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய இடையே கலந்துரையாடல்.
குறித்த கலந்துரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினை இலங்கை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்தல், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment