எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால் முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார். ஒரு வருடத்தின பின்னர், அந்த சாரதிகள் மருத்துவ பரிசோதனை முடித்ததும் அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.
வௌிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் காரணமாக சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாவிடினும் நாட்டினுள் கொரோனா பரவுவதற்காக அவதானம் இருப்பதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து வரும் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இதுவரையில் சமூகத்தினுள் கொரோனா தொற்று இல்லாவிடினும் அது பரவுவதற்காக அவதானம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிலவேளை எம்மால் இனங்காணப்படாத ஒரு கொரோனா தொற்றாளர் சமூகத்தில் இருந்தால் அதனூடாக கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment