மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாது - சட்டமாதிபர்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்புக்களில் கலந்து கொள்ளவும் முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால் முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார். ஒரு வருடத்தின பின்னர், அந்த சாரதிகள் மருத்துவ பரிசோதனை முடித்ததும் அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.
முட்டையின் விலை நாளை (07) முதல் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாளை முதல் வௌ்ளை முட்டையின் விலை 18 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 18 ரூபா 50 சதமாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. கோழிக் குஞ்சுகளின் விலை 350 ரூபாவாக அதிகரித்தமையாலேயே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் அதன் விலையை 175 ரூபாவாக குறைக்குமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களை தொடர்புகொண்ட பிரதமர், குறித்த கோரிக்கை தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் இதுவரை 338 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எணிணிக்கையானது 649 ஆக காணப்படுவதுடன், குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியவர்களின் தொகையும் 139 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரம் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்ப்டடுள்ளனர். தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மொத்தமாக 503 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் 141 பேரும், கடற்படை வைத்தியாலையில் 126 பேரும், கொழும்பு, கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையில் 75 பேரும், வெலிகந்தை வைத்தியசாலையில் 66 பேரும், காத்தான்குடி வைத்தியசாலையில் 55 பேரும், இரணவில வைத்தியசாலையில் 22 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 18 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மாத்திரமன்றி கொரோனா தொற்று சந்தேகத்தின...
Comments
Post a Comment