இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா!
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35 லட்சத்தைக் கடந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, 35 லட்சத்து 42 ஆயிரத்து 734 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 948 பேர் உட்பட கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,935 உட்பட இந்தியா முழுவதும் 27,13,934 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 7,65,302 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 76.61% ஆகவும், இறப்பு விகிதம் 1.79% ஆகவும் உள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment