ஈசி கேஷ் மூலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மாணவன் கைது.
வந்த நபரொருவரை ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் மாணவன் என்பது தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய நபர் ஒருவரையும் பொலிஸார் சூட்சுமமான முறையில் கைது செய்துள்ளனர்.
இரண்டாவதாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த கார், நான்கு வங்கி அட்டைகள் மற்றும் நான்கு கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment