கண்டி -ஹாரகம பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை.

கண்டி -ஹாரகம பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

கண்டி – தலவத்துஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் 29 இரவு 8.30 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அவ்வாறான நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.