1,024 கிலோ மஞ்சள் தொகை மீட்பு.
மன்னார் - பேசாலை - பெரிய கரிசல் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் ஆயிரத்து 24 கிலோ கிராம் மஞ்சள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மஞ்சள் தொகை இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் தொகை பாரவூர்தியில் கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment