திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலின் 17 பணியாளர்களுக்கு கொரோனா.
திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் உள்ள பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமை அடையாளம் காணப்பட்டதையடுத்து, அனைத்து ஊழியர்களுக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
4,000 மெற்றிக் தொன் எரிபொருளை தாங்கிய குறித்த கப்பல், திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்திற்கும் சென்றிருந்ததாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கப்பலையும் ஊழியர்களையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment