20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று.
20ம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை ஆரம்பமாகவுள்ளது.
இந்த மனுவை சவாலுக்குட்படுத்தி 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள், சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர் ரத்னஜீவன் ஹ_ல், சட்டத்தரணிகள், அமைப்புக்கள் அடங்கலாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, 20 ஆம் திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான இந்த குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, அந்த கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ, அமைச்சர் மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரான சான் விஜயலால் டி சில்வா, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்டத்தரணிகளான சாரதி துஸ்மந்த, சஞ்சய கமகே, பேராசிரியர் சமில் லியனகே ஆகியோரும் குறித்த குழுவில் அடங்குகின்றனர்.
குறித்த குழுவினால் தயாரிக்கப்படும் பரிந்துரை மற்றும் யோசனைகள் கட்சியினால் ஆராயப்பட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment