20 க்கு எதிராக நாளை வரை மனு தாக்கல் செய்ய முடியும்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தின் முன்வைத்தார்.
அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தை நாட கடந்த ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதற்கமைய 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்த்து 20 க்கும் குறைவான மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பை வழங்க 21 நாட்கள் உயர் நீதிமன்றத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் குறித்த சட்டமூலம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் பாராளுமன்றத்தால் எடுக்க முடியாது.
இதேவேளை, இன்றைய தினம் (28) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment