தபால் திணைக்களத்திற்கு வருடத்திற்கு 600 கோடி ரூபா நட்டம் !!
இலங்கை தபால் சேவை தனது சேவையின் நோக்கத்தை இனங்கண்டுக் கொண்டால் தேசிய பொருளாதாரத்தில் பிரதான பங்குதாரராக மாற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தபால் சேவையிடம் காணப்படும் பாரியளவிலான வளங்களை உரிய வகையில் முகாமை செய்வதன் ஊடாக குறித்த இலக்கினை இலகுவாக அடைய முடியும் என தபால் சேவை மற்றும் வெகுஜன ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.
வருடம் தோறும் தபால் திணைக்களத்திற்கு 06 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக குறித்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன் வளர்ச்சிக்காக பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்கும் பத்திரிக்கை சட்டத்தில் திருத்ததை மேற்கொள்ளவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வௌிநாட்டு நாடகத் தொடர் ஔிபரப்பின் போது அறவிடப்படும் வரியினை மீண்டும் செயற்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment