8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது.

 

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதிக்கு பின்னர் இன்று 6000 புள்ளிகளை கடந்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது.

இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 2498.52 புள்ளியாக இன்று (20) பதிவாகியுள்ளது. 

மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 6028.20 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.