கெளரவத்துக்குரிய குவைத் தலைவரின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்...இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத் மன்னர் ஷேக் சபாவின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
இந் நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment